33 வருடங்கள் கழித்து மிகுந்த வரவேற்பை பெற்ற தளபதி

 

சமீபத்தில் Super Star Rajnikanth  அவர்களின் 74 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டும் மற்றும் அவரின் 50 வது Golden Year In Cinema வை கொண்டாடும் வகையிலும் கடந்த 12.12.2024 வியாழன் அன்று  இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோரது நடிப்பில்  இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான "தளபதி" மெகா ஹிட் திரைப்படத்தை Digitalization( 4 K) வாக மாற்றம் செய்து SSI Production மூலம் தமிழ் நாட்டில் 150 மேலான திரையரங்குகளில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது என்பது குறப்பிடத்தக்கது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்த அடை மழை காலகட்டத்திலும் இப்பொழுது வரை வெற்றி நடை போட்டு வலம் வருகிறது.இந்த படத்தை இன்றைய தலைமுறைகள் கண்டு களித்ததும் இல்லாமல் மிகுந்த வரவேற்பையும் தந்து உள்ளனர். இதனால் இப்படத்தை வெளியிட்ட  SSI Production  இத்தருணத்தில் இந்த செய்தியின் மூலமாக அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும், மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. 

0 comments:

Pageviews