ப்ளடி பெக்கர் விமர்சனம்
படத்தில் கவின் பிச்சைக்காரனாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு எப்படியாவது மாளிகையில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்த சமயத்தில் நடிகர் ஒருவர் தன்னுடைய பங்களாவில் சமயத்தில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறார். அதில் கவினும் கலந்து கொள்கிறார். அப்போது அவருக்கு அந்த பங்களா வாழ்க்கை ரொம்ப பிடித்து விடுகிறது. இன்னொரு பக்கம் அந்த பங்களா உறவினர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை நடக்கிறது. இந்த பங்களாவிற்காக 5 வாரிசுகள் தனித்தனியாக சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். உயிர் மூலம் நிறைய பங்குகளை பெற்ற அந்த மகன் மட்டும் காணாமல் போய்விடுகிறார். அந்த மகனாக நடிக்க கவினை நடிக்க வைக்க ஒரு குரூப் திட்டம் போடுகிறார்கள். அதற்கு குடும்ப வழக்கறிஞரும் உதவுகிறார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு கவின் நடிக்கிறான் என்பது தெரிய வந்து அனைவருமே சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி சொத்தை தங்களுடைய வசமாக்க முடிவு செய்கிறார்கள்.
அந்த பணக்கார குடும்பத்தின் சதி திட்டத்திலிருந்து கவின் தப்பித்தாரா? சிக்கினாரா? இல்லை அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து உண்மையிலேயே அந்த மாளிகையை ஆண்டாரா? என்பது தான் படத்தின் கதை.
படத்தில் கவின் பிளடி பெக்ராக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. சீக்கிரம் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தன்னுடைய தோற்றத்தில் கவின் மிரட்டி இருக்கிறார். பணக்காரனாக பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ கவின் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
கதை புதுமையாக இல்லை என்றாலும் அதை இயக்குனர் வித்தியாசமான முறையில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்திற்கு இசை, ஒளித்தொகுப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது.
0 comments:
Post a Comment