ஜாலியோ ஜிம்கானா திரைப்பட விமர்சனம்
தந்தை ஒய்.ஜி.மகேந்திரன் மகள் செல்லம்மாவிற்கு (அபிராமி) மூன்று மகள்கள். பவானி (மடானோ செபாஸ்டியன்), யாழினி (அபிராமி பார்கவன்), மற்றும் ஷிவானி (மரியா) ஆகியோருடன் சேர்ந்து வெள்ளைக்காரன் பிரியாணி என்கிற பெயரில் ஓட்டல் தொடங்க எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. பிரியாணி சம்ளை செய்தவுடன் பணத்தை தராமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் பவானியின் தாத்தாவை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிரட்டப்பட கடையை நடத்த முடியாமல் பவானி தவிக்கிறார். இந்நிலையில் ஏழை மக்களின் மருத்துவ காப்பீட்டில் முறைகேடு செய்து பணம் சம்பாதிக்கும் எம்எல்ஏவை எதிர்க்கிறார் வக்கீல் பூங்குன்றன். அதனால் எம்எல்ஏக்கு எதிராக இருக்கும் வழக்கறிஞர் பூங்குன்றனை தாத்தாவின் யோசனைப்படி பவானி குடும்பம் உதவியை நாடுகிறது. அங்கே பூங்குன்றனை யாரோ கொலை செய்துவிட, தங்கள் மேல் கொலைப்பழி விழுந்துவிடாமல் இருக்க பூங்குன்றனின் பிணத்தோடு ஹோட்டலில் இருந்து தப்பிக்கிறார்கள். அதன் பின்னர் நடக்கும் துரத்தலும் காமெடி கலாட்டா தான் இந்த ஜாலியா ஜிம்கானாவின் என்பதே படத்தின் கதை.
ஆட்டம், பாட்டம் என்று கலகலப்பான கதாபாத்திரங்களில் அசத்தும் பிரபு தேவா, படம் முழுவதும் பிணமாக நடித்திருப்பது ஆச்சரியமானதாக இருந்தாலும், அதை மிக அழகாக செய்திருக்கிறார். மடோனா செபாஸ்டின், அபிராமி, யோகிபாபு, அபிராமி பார்கவன், யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.மகேந்திரன், மரியா, மதுசூதன் ராவ், ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, சிவா, புஜிதா சக்தி சிதம்பரம், ரெடின் கிங்ஸ்லி, ‘ஆடுகளம்’ நரேன், வினோத், கோதண்டம், கதிர், ஆதவன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கதைக்கு உறுதுணையாக உள்ளது.
கலை இயக்கம் – ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ராமர், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, நடன இயக்கம் – பூபதி ராஜா, சண்டை இயக்கம் – மகேஷ் மாத்திவ், பிரதீப், பாடல்கள் – மு.ஜெகன் கவிராஜ் ஆகியோர் தங்களது பணியை இயக்குனரின் விருப்பப்படி செய்து கொடுத்துள்ளனர்.
நான்கு பெண்கள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டு, அச்சுறுத்தும் கடன்காரர்கள், கொலைகார கையாட்கள், சாதிவெறி பிடித்த போலீசார் மற்றும் கண்டிப்பான வங்கி மேலாளரிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுடன் கொஞ்சம் சமூக அக்கறை கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் சாரம்சம். உண்மையில், ஜாலி ஓ ஜிம்கானா ஒரு மெலிதான ஒன்-லைனரில் கட்டமைக்கப்பட்டு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம்.
0 comments:
Post a Comment