தூவல் திரைப்பட விமர்சனம்

 

ஆற்றங்கரை ஓரத்து கிராமம். ஆற்றில் நீர் வரும் நேரத்தில் மீன் பிடிப்பதையும் மற்ற நேரங்களில் சாராயம் காய்ச்சுவது, மரம் வெட்டுவது, காட்டில் மிருகங்களை வேட்டை ஆடுவது என்று என்றும்காலத்தை கழிக்கிறார்கள், மக்கள். வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் தொழிலையும் சிலர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆற்றிலும், அருகில் இருக்கும் குட்டையிலும் வெடி போட்டு மீன் பிடிக்கிறார்கள் சிலர். இதனால் ஏற்படும் பாதிப்பை ரத்தமும் சதையுமாகச் சொல்லி இருப்பதுதான் தூவல்.

அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். குறிப்பாக ராஜ்வேல், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கிராமவாசியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். வன அதிகாரியாக வரும் ராஜ்குமாரும் சிறப்பாக நடித்து உள்ளார்.

எஸ்.ஏ. தர்வேஸின் ஒளிப்பதிவு, படமா சதீசின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.

இசை – படமாசதீஷ். மோகன் ராஜா வரிகளில் பாடல் வரிகள் கவனிக்க வைக்கின்றன.

ஆற்றங்கரையோர மக்களின் வாழ்க்கையை நிதர்சனமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

மொத்தத்தில் கவனத்தை ஈர்க்கும் திரைப்படம்.

0 comments:

Pageviews