ராம்ராஜ் காட்டன் விளம்பரதூதராக பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் நியமனம்
இந்தியாவின் முன்னணி பாரம்பரிய மற்றும் கலாசார ஆடை நிறுவனம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ராம்ராஜ் காட்டன், பாலிவுட் நடிகர் திரு. அபிஷேக் பச்சனை புதிய விளம்பரத் தூதுவராக அறிவித்துள்ளது. தனித்துவமான ஆளுமையும், பல்வேறு தரப்பு ரசிகர்களிடையே செல்வாக்கும் கொண்ட திரு. அபிஷேக் பச்சன், வரவிருக்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் நிறுவனத்தின் விளம்பரங்களில்
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்படுவார்.
திரு. அபிஷேக் பச்சனுடனான இந்த கூட்டாண்மை, ராம்ராஜ் காட்டனின் சுதேசி வேர்களை மேம்படுத்தி, பாரம்பரிய ஆடைப் பிரிவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. அனைத்து வயதினரையும் கவரும் அபிஷேக்கின் வசீகரமான தோற்றமும், மக்களுடனான தொடர்பும், வேட்டி, சட்டை மற்றும் குர்தாக்கள் உள்ளிட்ட ராம்ராஜின்
தயாரிப்புகளுக்கு பொருத்தமான விளம்பரதூதராக அவரை ஆக்குகிறது. இந்தக் கூட்டாண்மையின் மூலம் ராம்ராஜ் காட்டன் உயர்தர, பாரம்பரிய ஆடைகளை வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும். அதேவேளையில், இந்தியாவின் கலாசார நெசவைக் கொண்டாடவும் ராம்ராஜ் காட்டன் இலக்கு கொண்டுள்ளது. அபிஷேக் பச்சனை முன்னிலைப்படுத்தும் ராம்ராஜ் காட்டனின் விளம்பரங்கள் விரைவில் வெளிவர உள்ளது. இது தரத்துக்கும் கலாசாரப் பெருமைக்குமான ராம்ராஜ் நிறுவனத்தின் காலத்தால் அழியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்.
திரு. கே.ஆர். நாகராஜன், ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் மற்றும் தலைவர் கூறுகையில், ‘‘அபிஷேக் பச்சனை ராம்ராஜ் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உண்மைத்தன்மைக்கான அவரது நற்பெயரும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுடனான அவரது தொடர்பும் எங்கள் பெருமையாக கருதுகிறேன். ராம்ராஜ் காட்டன் எப்போதுமே இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், ஒவ்வொரு நூலிலும் கலாசாரப் பெருமையை நெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அபிஷேக்குடன் கைகோர்ப்பதன் மூலம், இந்திய பாரம்பரியத்தின் இந்த பெருமையை ரசிகர்களின் இதயங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். எங்கள் தயாரிப்புகள் மூலம், வேட்டி, சட்டை மற்றும் குர்தாக்களின் மேன்மையை மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும் என்று விரும்புகிறோம். கலாச்சாரத்துடன் இணைந்த நாகரிகமான ஆடைகளை அணிவதில் கிடைக்கும் பெருமிதத்தை மீட்டெடுக்க விரும்புகிறோம்’’ என்றார்.
நடிகர் திரு. அபிஷேக் பச்சன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கையில், ‘‘இந்திய ஆடைகளில் இத்தகைய வலுவான பாரம்பரியத்தைக் கொண்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைவது பெருமைக்குரியது. பாரம்பரியத்தையும் தரத்தையும் ஆழமாக மதிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ராம்ராஜின் சிறப்புகளை ரசிகர்களுக்குக் கொண்டு செல்வதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நம் பாரம்பரிய உடைகளின் மேன்மை நவீன இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாக மாறும் எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இவ்வாறு பழமைக்கும் நவீனத்துக்கும் இடையே பாலம் அமைப்பதன் மூலம், இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் நம் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்துகிறோம்’’ என்றார்.
0 comments:
Post a Comment