Amaran Movie Review


Sivakarthikeyan, who belongs to a middle-class family, has a desire to join the army from an early age. His father agrees to it, but his mother refuses to agree. Sivakarthikeyan, who is studying in a Christian college, falls in love when he sees Sai Pallavi, a Kerala girl who comes there.

After completing his college studies, he joins the army.  Sivakarthikeyan family accepts the love while Sai Pallavi family opposes the love. Then Sivakarthikeyan meets her parents to get their consent and they get married. 
A beautiful baby girl is born to them.

After this Sivakarthikeyan gets a high rank in the army. After that, he took command of the 44th Rashtriya Rifles. To suppress the terrorist threat in the Kashmir region, a very dangerous terrorist is shot dead. 
The terrorist's brother wants to take revenge on Sivakarthikeyan. 
Did Sivakarthikeyan eventually find and kill the terrorist's brother? 
Isn't it? 
That is the rest of the story of Amaran.

இதனையடுத்து இராணுவத்தில் உயர் பதவியை பெறும் சிவகார்த்திகேயன். அதன் பிறகு  44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் தலைமை பொறுப்பை ஏற்கிறார். காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஒடுக்க அதி பயங்கர தீவிரவாதி ஒருவனை சுட்டு வீழ்த்துகிறார். அந்த தீவிரவாதியின் தம்பி சிவகார்த்திகேயனை பழிவாங்க நினைக்கிறான். இறுதியில் சிவகார்த்திகேயன் தீவிரவாதியின் தம்பியை கண்டுபிடித்து கொன்றாரா? இல்லையா? என்பதே அமரன்’  படத்தின் மீதிக்கதை.

மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அந்த  கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.  பேச்சு ,உடல் மொழி,, ஆக்சன்  என அனைத்து காட்சிகளிலும் தன்  திறமையை  நிரூபித்து  காட்டியிருக்கிறார். காதலியிடம் காட்டும் நேசம், பெற்றோரிடம் காட்டும் பாசம், சக வீரர் கொடுக்கும் கவுரவம் என அனைத்திலும் ஜொலிக்கிறார் சிவகார்த்திகேயன்

இந்து ரெபெகா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது . காதலுக்காக  தனது பெற்றோர்களிடத்தில் போராடுவது  கணவன் இறப்புச் செய்தி அறிந்து கதறி அழாமல் இறுக்கமான முகத்துடனேயே இருப்பது என அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இராணுவத்தின்  உயர் அதிகாரியாக நடித்திருக்கும்  ராகுல் போஸ். சிவகார்த்திகேயன் அப்பா - அம்மாவாக வருபவர்கள் சாய் பல்லவி  பெற்றோர்களாக வருபவர்கள்  இராணுவ சக வீரர்களாக வருபவர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக  இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இசையில் அணைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை  பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு. காதல் காட்சிகளை  அழகாவும் போர்   காட்சிகளை  பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி  படத்தின் முதல்  காதல், கல்யாணம் என செல்ல இரண்டாம் பாதி போர், வீரம் என அழகாக கதையை நகர்த்தி செல்லும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

0 comments:

Pageviews