பாராமெளன்ட் பிக்சர்ஸ் வழங்கும் கிளாடியேட்டர் 2

 

கிளாடியேட்டர் எனும் வரலாற்றுக் காவியப்படம், ரிட்லி ஸ்காட் இயக்கி, ரஸ்ஸல் க்ரோவின் சிறப்பான நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியானது. கிளாடியேட்டராகும் வஞ்சிக்கப்பட்ட படைத்தலைவன் மேக்சிமஸ், தனது குடும்பத்தினருக்காகப் பழிவாங்குதலும், அதற்குக் காரணமான அதிகப்படியான லட்சியங்கள் கொண்ட ரோமப் பேரரசரின் வஞ்சகமும் தான் அப்படத்தின் மையக்கரு. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த செளண்ட் எஃபெக்ட்ஸ், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் 73 ஆவது அகாடெமி விருதுகளை வென்றது.  


முதல் பாகம் நிகழ்ந்தேறிய இரண்டு தசாப்தங்களுக்குப் பின், அப்படத்து நாயகனான மேக்சிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆகின்றான். அவனது மனைவியை ரோமப் பேரரசின் படைத்தலைவனான மார்கஸ் அகாக்யுஸ் கொன்றுவிட, அடிமையாகும் லூசியஸ், முன்னாள் அடிமையான மேக்ரினஸின் உதவியுடன் பழிவாங்குகின்றான். மேக்ரினஸாக டென்செல் வாஷிங்டனும், லூசியஸாக பால் மெஸ்கலும், மார்கஸ் அகாக்யூஸாக பெட்ரோ பாஸ்கலும் நடித்துள்ளனர்.


இப்பத்தின் முதல் காட்சி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஒளிபரப்பப்பட்டது. 

 

படக்குழு :– 


Joseph Quinn as Emperor Greta, 

Fred Hechinger as Emperor Cara Calla, 

Derek Jacobi, 

Connie Nielsen etc


ஒளிவுப்பதிவு - John Mathieson 

இசை - Harry Gregson Williams

இயக்கம் – ரிட்லி ஸ்காட் (கிளாடியேட்டர் முதல் பாகத்தை இயக்கியதும் இவரே!)


இன்று நவம்பர் 15 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் Viacom 18 STUDIOS வெளியிடுகிறது. 

0 comments:

Pageviews