உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்லி-டேவிட்சன் ரைடு

 

நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது.

 

இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ் இயற்கைக்காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலும் சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்கிறது. மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாது கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகசத்தை உறுதி செய்கிறது.


அந்தமானின் ரம்பிள் தீவில் ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின்  'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது. ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மூலம் போர்ட் பிளேர் வழியாக சவாரி செய்து, மறக்க முடியாத பயணத்தை உருவாக்கியது.



இந்த ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் கொடுத்து வருகிறது வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours. இந்த வரலாற்று நிகழ்வு எல்லைகளைக் கடந்து புதிய பயண அனுபவங்களை உருவாக்குகிறது.


இந்த நிகழ்வு வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது மட்டுமல்லாது, இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் சுற்றுலா துறையின் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

0 comments:

Pageviews