லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் ஃபீஸ்ட் 2024 : சென்னையில் ஒரு அதிரடி இசை விழா !

 

லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னையில் ஒரு அதிரடி இசை விழா நடைபெற உள்ளது.அதில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.


லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர்.


அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்.

அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர்

 வரவிருக்கிறார்கள்.


விழா பற்றி லிடியன் பேசும் போது,


"இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார்.

ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ்,திறமையுள்ள ஆனால் பலரால் அறியப்படாத இளை போன்றோரும் பங்கேற்க இருக்கிறார்கள்.


 இவ்விழாவில் 32 கிராமிய விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற வெற்றி பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள்.


மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அதிரடி இசை விழாவில் பல்வேறு  பிரமுகர்கள் எதிர்பாராத வருகை தரவிருக்கிறார்கள்'' என்றார்.


லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இது ஒரு 3டி படமாகும். பரோஸ் ஐந்து மொழிகளில் தயாராகிறது.


அதுமட்டுமல்லாமல் லிடியன் நாதஸ்வரம்  ஓர் உலக சாதனை முயற்சியில் இறங்கி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும்போது,


" நானும் என் அக்கா அமிர்தவர்ஷினியும் சேர்ந்து 1330 திருக்குறளுக்கு இசையமைத்துப் பாடி உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

ஏராளமான பிரமுகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் மோகன்லால் கூட ஒரு திருக்குறளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.இந்த முயற்சி விரைவில் நிறைவு பெற்று வெளிவர உள்ளது.


இந்த ட்ரம்ஸ் பெஸ்ட்டிவலை முதலில் நடத்துகிறோம்.

இந்த ஃபெஸ்டிவல் வரும் ஆண்டுகளில்  இன்னும் விரிவடைந்து நடைபெற உள்ளது. அடிப்படையில் நான் ஒரு பியானோ பிளேயர் . அடுத்த ஆண்டு பியானோ ஃபெஸ்டிவலும் நடத்த இருக்கிறேன்.


 ஓமன், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தெல்லாம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அனைவரும் வந்து ஆதரவு கொடுங்கள். இந்த விழாவை முன்னிட்டு திரட்டப்படும் நிதி பல்வேறு சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது

 ''என்றார்.Book my showவில் கிடைக்கும்.

0 comments:

Pageviews