நந்தன் திரை விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மையமாக மையப்படுத்தியது தான் இந்த படம். படத்தில் பாலாஜி சக்திவேல் என்பவர் ஆதிக்க வர்க்க குடும்பத்தில் சக்திவேல் அதிகாரம் செய்கிறார். இவர் பல வருடமாக ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். அந்த ஊரிலேயே இவர் மிகுந்த செல்வ வளத்துடன் இருக்கிறார். இதனால் இவரை எதிர்த்து யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தொடர்ந்து இவரே பதவியில் நீடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாலாஜி சக்திவேல் இருக்கும் தொகுதியில் திடீரென்று தாழ்த்தப்பட்டவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று தான் இதை அறிந்த பாலாஜி சக்திவேல் கொதித்துப் போய் சண்டை போடுகிறார். பின் தனக்கு விசுவாசியாகவும், தான் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்கும் ஒரு ஆளை தலைவராக்கி தன்னுடைய அடிமையாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகிறார். அப்படிப்பட்ட நபராக தான் இவர் சசிகுமாரை தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்திவேலின் வீட்டில் சசிகுமார் வேலை செய்கிறார். பின் போட்டி இல்லாமலேயே சசிகுமார் தலைவராக ஆகிறார். தலைவராகிய இல்லாமலேயே சசிகுமார் என்ன செய்தார்? பாலாஜி சக்திவேலின் எண்ணத்தை முறியடித்தாரா? அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தையும் என்ன செய்தார்? தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமையை மீட்டெடுத்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
அம்பேத்குமார் என்கிற கூல்பானை என்ற கதாபாத்திரத்தில் அழுக்கு படிந்த உழைப்பாளியாக வாழ்ந்திருப்பவர், ஊராட்சி மன்ற தலைவரான பிறகு, அந்த பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் போது அவருக்கு நேரும் சோகம் மனதை பதற வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலஜி சக்திவேல், சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் திரையில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார். சமுத்திரக்கனி, ஸ்டாலின், வி.ஞானவேலு, ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரவணனின் கேமரா கிராமத்தின் அழகை மட்டும் இன்றி, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சாதி ஒடுக்குமுறை குறித்து முழுமையான ஆவணமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா சரவணன்.
0 comments:
Post a Comment