'மையல்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா!
மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் 'மையல்’ படத்தில் வலுவான கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் டிராமாவாக உருவாகி இருக்கும் தனது முதல் படத்திலேயே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி என்கிறார் சம்ரித்தி. எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரித்தி சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டவர்.
' மையல் ’ படத்தில் தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சம்ரித்தி, “இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா 2021 ஆகிய பட்டங்களை வென்றவர். பிரதி பூவன்கோழி 2019, சுமேஷ் மற்றும் ரமேஷ் 2021, கைபோல 2023 மற்றும் அவரது வரவிருக்கும் வெளியீடான பரன்னு பரன்னு பரன்னு செல்லன் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.
0 comments:
Post a Comment