கோழிப்பண்ணை செல்லதுரை திரை விமர்சனம்

 

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள். ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட, அவர்களுக்கு கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார். பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க நினைக்கும் நாயகன் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். அவர்கள் மூலம் அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா?, விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை 


யோகி பாபு நகைச்சுவையை தாண்டி, ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதில் அழகாக நடித்துள்ளார். கதையின் நாயகன் ஏகன் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தங்கை கதாபாத்திரத்தில் வரும் சத்யாவின் நடிப்பும் நன்று. நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு சின்ன வேடம் தான் என்றாலும், அதை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.


 ரகுந்ததனுடைய இசை கதைக்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கிறது. அசோக்ராஜூடைய ஒளிப்பதிவு தேனியின் அழகை படம் பிடித்து காட்டியிருக்கிறது.


தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் மனித உணர்வுகளுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு தெய்வீக பயண உணர்வை பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார் கடத்தியிருக்கிறார்.

0 comments:

Pageviews