நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

 

நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது... திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்... 


 அவர் கடைசியாக நடித்த படம் "சாலா", அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் "நீ விக்கற... அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே" இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம்  "சார்... இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்...  நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல" என சொன்னார்... குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று "கடைய மூடுங்க"  என்பதாகத்தான் இருக்கும்... 


சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கடைசி நாட்களில் "அப்ப குடிச்சேன் ஜாலியா இருந்தது இப்ப இவ்வளவு வேதனைப்பட வேண்டியதா இருக்கு"  எனச் சொல்லிச் சொல்லி கேட்பவர்களை எச்சரித்து தன்னால் முடிந்த மதுவுக்கு எதிரான குரலை பதிவு செய்திருக்கிறார்.


 பிஜிலி ரமேஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்... அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தாருக்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

0 comments:

Pageviews