புதிய காலணிகள் தொகுப்பை விளம்பரப்படுத்த வாக்கரூ தேசிய விளம்பர தூதராக இந்தி நடிகர் வருண் தவான் நியமனம்


 நாட்டின் முன்னணி காலணி பிராண்டுகளில் ஒன்றாக திகழும் வாக்கரூ, தனது பிராண்டின் தேசிய விளம்பர தூதராக இந்தி நடிகர் வருண் தவானை நியமனம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் "வாக். வாக். வாக். வாக் வித் வாக்கரூ" என்னும் விளம்பரத்தின் மூலம் இதன் புதுமைமிக்க காலணிகளை மக்களிடையே பிரபலப்படுத்த இருக்கிறார்.


இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாக்கரூ+ மற்றும் சூப்பர் க்ளாக்ஸ் உட்பட இதன் புதுமையான காலணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் புதிய விளம்பரத்தை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. இளம் நடிகர் வருண் தவான் உடன் இணைந்திருப்பது என்பது எங்கள் தயாரிப்புகளின் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு, நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறை மற்றும் பேஷன் மீது ஆர்வமுள்ள நுகர்வோரை ஈர்க்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி. நவ்ஷாத் கூறுகையில்,  நடப்பதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புமிக்க பணியில் வருண் தவான் எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவரது இளமை ஆற்றல் மற்றும் ஸ்டைலான ஆளுமை எங்கள் பிராண்ட் உடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இளைய தலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள வருணை எங்கள் பிராண்டின் விளம்பர தூதராக நியமித்து இருப்பதன் மூலம் எங்களின் தயாரிப்புகள் ஏராளமான பேரை சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.


நடிகர் வருண் தவான் கூறுகையில், வாக்கரூவுடன் கைகோர்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாக்கரூ அனைத்து வயதினருக்கும் ஏற்ற பிராண்டாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் உச்சரிக்கும் பெயராகவும் உள்ளது. நடை பயிற்சியின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் இதன் பார்வை என்னை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. இதன், "வாக். வாக். வாக். வாக் வித் வாக்கரூ" என்னும் விளம்பரம் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு எளிய தீர்வாக நடைபயிற்சியை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கிறது. இந்த பிராண்டின் புதுமைமிக்க காலணி தொகுப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதில் நானும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். 


இந்தியாவில் குறைந்த விலையில் புதுமைமிக்க காலணிகள் விற்பனையில் வாக்கரூ முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் அதன் தயாரிப்புகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வருண் தவானை வாக்கரூ அதன் விளம்பர தூதராக நியமித்துள்ளது. வாக்கரூ உடன் அவர் இணைந்திருப்பதன் மூலம் இந்த பிராண்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் கருதுகிறது.

0 comments:

Pageviews