பேச்சி விமர்சனம்

 

காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை மீறி அவர்கள் உள்ளே செல்கின்றனர். அதற்குப் பிறகு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அதனால் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் வருகிறது. அதை சமாளிப்பதற்கு அவர்கள் நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். மேலும் காட்டில் காத்திருக்கும் பேச்சுக்கு இவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்தப் பேச்சு? எதற்காக அவள் காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? பேச்சியிடமிருந்து அனைவரும் தப்பிப்பார்களா? என்பதுதான் மீதி கதை.

காட்டுக்குள் செல்பவர்கள், காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேர்.எல்லோருக்கும் சமமான இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அனைவரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து அவருக்கு நற்பெயர் பெற்றுத்தந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் உற்சாகத்தைக் காட்டும் காட்சிகளில் இரசிகர்களும் உற்சாகமாகிறார்கள். அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கி அச்சப்பட்டு அலறும் நேரத்தில் இரசிகர்களையும் அலற வைக்கிறார்கள்.

இதுவரை பாலசரவணனை நகைச்சுவை வேடங்களில் பார்த்து வந்தோம்.அவருக்கு இந்தப்படத்தில் குணச்சித்திர நடிகராகப் பதவி உயர்வு.அதில் தன்னை முழுக்க ஒப்புக்கொடுத்து வரவேற்புப் பெறுகிறார்.தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொடும் ஆபத்துகளை எதிர்கொண்டு நம்மைப் பதற வைக்கிறார்.

திகில் படங்களுக்கு இசை முக்கியம்.பாடல்களில் துடிப்பையும் பின்னணி இசையில் படபடப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.

எழுதி இயக்கியிருக்கிறார் இராமச்சந்திரன்.பி. ஒரு அமானுஷ்ய சக்தியை பேய் என்று சொல்லாமல் வேறொன்றாகச் சொல்லியிருப்பது புதிது.இது போன்ற அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட படங்கள் என்றாலே இருள் முக்கியத்துவம் பெற்றுவிடும்.முதன்முறையாக பகலிலேயே எல்லாக் காட்சிகளையும் படமாக்கி அதிலும் பார்வையாளர்களைப் பயப்பட வைத்துப் பாராட்டுப் பெறுகிறார்.

0 comments:

Pageviews