அந்தகன் திரை விமர்சனம்

 



பார்வையற்றவரான பிரஷாந்த் பியானோ இசைக்கலைஞர். லண்டனில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக பியானோ வகுப்பு எடுத்து பணம் சேர்ப்பவருக்கு, மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது. அதன் மூலம் நடிகர் காத்திக்கின் நட்பு கிடைக்க, அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சிறு இசை நிகழ்ச்சி நடத்த செல்கிறார். ஆனால், அங்கு சென்றதும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பிரஷாந்த் கண் முன் நடக்கிறது. அது என்ன?, பார்வையற்றவராக இருக்கும் பிரஷாந்த் கண் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல் ஏற்படுகிறது?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை 


சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார் பிரசாந்த்/நிஜத்திலும் பியானோ இசைப்பவர் என்பதால் அவருக்கு மிகப் பொருத்தமான வேடம்.அதில், கட்டுகோப்பான உடலுடனும் கச்சிதமான நடிப்புடனும் கவர்கிறார்.பார்வை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். நடிகர் கார்த்திக் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நவசர நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழலுக்கு ஏற்ப முகத்தை மாற்றி ரியாக்‌ஷன் கொடுக்கும் காட்சிகள் அசத்தல்.  அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி மூலம் திரையில் சரவெடியாக வெடித்திருக்கிறார்.


சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி அனுபவத்தை கொடுக்கிறது.


‘அந்தாதுன்’ இந்தி படத்தை பார்த்தவர்களுக்கு புதிய அனுபவம் கொடுக்கும் வகையில் சில மாற்றங்களோடு இயக்கியிருக்கும் இயக்குநர் தியாகராஜன், அந்த படத்தை பார்க்காதவர்களுக்கு காட்சிக்கு காட்சி திருப்பங்களை வைத்து மிகப்பெரிய திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

0 comments:

Pageviews