ரகு தாத்தா திரை விமர்சனம்
1960களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட அடாவடி பெண் கயல்விழி (கீர்த்தி சுரேஷ்). இந்தி திணிப்புக்கு எதிராக போராடி, தன் ஊரில் பிறந்த ஏக்தா சபாவை மூடி சாதித்த அவர், அவ்வூரில் கெத்தாக வலம் வருகிறார். வள்ளுவன் பேட்டை எனும் ஊரில் வங்கி ஒன்றில் அப்பர் டிவிஷன் கிளர்க்காக வேலைப் பார்த்து கொண்டிருக்க்கும் தன்னுடைய தாத்தா எம்.எஸ்.பாஸ்கரால் வளர்க்கப்படுகிறார் எதிர்பாராத ஒரு சூழலில் எம்.எஸ். பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னைப் போலவே முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர் என நினைத்து தமிழ் செல்வன் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு மொட்ட கடுதாசி வருகிறது. அது மூலமாக, தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை ஒரு ஆணாதிக்கவாதி, பிற்போக்கு சிந்தனைகள் நிறைந்தவர் என்கிற உண்மை கீர்த்தி சுரேஷூக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு கீர்த்தி சுரேஷ் என்ன முடிவெடுக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை
கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் புரட்சிகரமான மங்கையாக வலம் வந்து, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குநர் சுமன் குமார். பெண்கள் முன்னேற்றம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என படம் சென்றாலும் ஓவராக அறிவுரை வழங்குவது போன்று இல்லாதது ரகு தாத்தாவின் பெரிய பலம்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இயக்குநர் சுமன் குமார். பெண்கள் முன்னேற்றம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என படம் சென்றாலும் ஓவராக அறிவுரை வழங்குவது போன்று இல்லாதது ரகு தாத்தாவின் பெரிய பலம்.
0 comments:
Post a Comment