ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’
நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை.
மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
பேனர்: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: ஆர் வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங்,
கதை-திரைக்கதை-உரையாடல்: ஜெய மோகன்,
இயக்கம்: ஏபிஜி ஏழுமலை,
இசை: அமர்கீத்,
ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன்,
எடிட்டிங்: பாலா சண்முகம்,
பாடல் வரிகள்: விவேகா-ஏகாதசி-கருணாகரன்,
சண்டைக்காட்சி: ஓம் சிவபிரகாஷ்,
சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சி. சேது,
மிக்ஸிங் அட்மோஸ் - டி. உதயகுமார்,
தயாரிப்பு வடிவமைப்பு: வர்ணாலயா ஜெகதீசன் ,
ஆடை: செந்தில் அழகன்,
வடிவமைப்பாளர்: ஷபீர்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்
0 comments:
Post a Comment