டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் "1000 பேபிஸ்" ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Babies

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "1000 பேபிஸ்" சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 "1000 பேபிஸ்" சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளனர். 

நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா
ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த்
முரளி மற்றும் ஜேம்ஸ் ஆலியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையுடன்,
தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஃபசல் A பேக்கரின் ஒலி கலவையில், "1000 பேபிஸ்" 
சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது. விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "1000 பேபிஸ்" சீரிஸை கண்டுகளியுங்கள் !

0 comments:

Pageviews