ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அலியா பட் இந்த வார தொடக்கத்தில் தனது பெரிய ஆக்ஷன் என்டர்டெய்னரான ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் படமான ஆல்ஃபாவில் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆல்ஃபாவின் செட்களில் உற்சாகமாக அலியா வலம் வரும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வீடியோ காட்சிகளில் உள்ள அலியாவின் தோற்றம் படத்திற்கான லுக் அல்ல என்பதை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட செட்டுக்குள் அலியா நடந்து செல்லும் போது வெகு தொலைவில் இருந்து கிளிக் செய்யப்பட்டார்.
ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படமான ஆல்ஃபாவில் முதன்மை பெண் கதாபாத்திரமாக, சூப்பர் ஏஜென்டாக ஷிவ் ராவைல் இயக்கத்தில் அலியா பட் நடிக்கிறார். ஷிவ் ராவைல் இதற்கு முன்பு ஒய்ஆர்எஃப் யுனிவர்ஸை உலகளாவிய அளவில் வெற்றியடைய செய்தார். மேலும், பெரும் சோகத்தை ஏற்படுத்திய போபால் வாயு கசிவு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃபிலிக்ஸில் 'தி ரயில்வே மென்' தொடரை எடுத்து கவனம் ஈர்த்தார்.
தி ஒய்ஆர்எஃப் ஸ்பைவர்ஸ் இதுவரை ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் & டைகர் 3 போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளது. ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து தற்போது தயாரிப்பில் உள்ள மற்றொரு படம் ஹிருத்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'வார்2' ஆகும்.
0 comments:
Post a Comment