டீன்ஸ் திரை விமர்சனம்
படத்தில் ஒரு ஊரில் 12 சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ரொம்ப மெச்சூராக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். சொல்லப்போனால் அவருடைய பெற்றோர்கள் அவர்களை குழந்தைகளைப் போல நடத்துவது பெற்றோர்கள் இல்லை. பெரியவர்களை போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது ஒரு சிறுமி, தன்னுடைய பாட்டியின் ஊரில் பேய் இருப்பதாக சொல்கிறார். அதையும் பார்த்துவிடலாம் என்று அந்த 12 சிறுவர்கள் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்கின்றார்கள். அப்படி செல்லும்போது வழியில் ஒரு பையனையும் தங்களுடன் இழுத்துக்கொண்டு 13 பேராக பையனையும் அப்போது அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் காட்டு வழியில் பயணிக்கிறார்கள். மேலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து விடுகிறார்கள். இதனால் சிறுவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்தடுத்து சிறுவர்கள் தொலைந்து கொண்டே போவதால் மற்றவர்கள் தேடுகிறார்கள். கடைசியில் என்ன ஆனது? பேய் இருக்கிறதா? என்பது தான் படத்தின் பேய் கதை.
படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர், சிறுமியர்கள் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி அனைத்தும் நச்சுனு இருக்கிறது. நக்கலும் நையாண்டியும் கலந்த தனது பாணியின் சாயலை முடிந்த அளவு தவிர்த்திருக்கும் அல்லது நவீனப்படுத்தியிருக்கும் இயக்குநர் பார்த்திபன், நடிகராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் யோகிபாபு.
இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி குறைந்த பட்ஜெட்டையும் தாண்டி காட்சியில் பிரமாண்டத்தை புகுத்த முயற்சித்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் பார்த்திபன். சிறுவர்களை மட்டுமே வைத்து ஒரு படம் எடுத்திருப்பதும் அதில் பேசியிருக்கும் விசயங்களும் பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பதும் வரவேற்புக்குரியவை.
0 comments:
Post a Comment