அக்காலி திரை விமர்சனம்
போதை கடத்தல் கும்பலை பிடிக்க, காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு, ஒரு மயானத்தில் அந்த கும்பலின் நடமாட்டம் இருப்பது தெரியவர, காவல்துறை குழுவினர் செல்கின்றனர். அங்கே பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதையும், சாத்தானை வழிபடும் குழுவினர், பூஜைகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அதோடு, நரபலி கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அதிர்ச்சியடையும் ஜெய்குமார், அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, பல திடிக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது அது என்ன என்பது தான், ‘தி அக்காலி’ படத்தின் கதை.
முதல் பாதி திரைக்கதையை அனுபவிக்க நடிகர் ஜெயக்குமார் ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையை நாசர் ஆக்கிரமித்திருக்கிறார். இவர்களைக் கடந்து படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை திரையில் செய்திருக்கிறார்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும், கலை இயக்குநரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகின்றனர்.
முகமது ஆஷிப் ஹமீது எழுதி இயக்கியிருக்கிறார்.பாதுகாப்பான கதைகள் பல இருக்க இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து தன் தனித்துவத்தை நிறுவ நினைத்திருக்கிறார். சாத்தான்களை வழிபடும் குழுக்கள் அவர்களின் செயல்பாடுகள் ஆகியனவற்றை விரிவாகக் காட்சிப்படுத்தியிருப்பது புதிது.
0 comments:
Post a Comment