கல்கி 2898 ஏடி திரை விமர்சனம்

 

நாம் வாழும் இந்த காலகட்டதிலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின், பல அழிவுகளுக்கு அப்பால் ‘காம்ப்ளக்ஸ்’ என்ற பெயரில், தனக்கென தனி வாழ்விடத்தை உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார் சுப்ரீம் யஸ்கின் (உலக நாயகன் கமல்ஹாசன்). அந்த காம்ப்ளக்ஸிற்குள் சென்று அதன் வசதிகளை அடைய பைரவா (பிரபாஸ்) விரும்புகிறார் இந்த நிலையில் கர்ப்பிணியான தீபிகா படுகோன் காம்ப்ளக்ஸில் இருந்து தப்பித்து விடுகிறார். அந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற நினைக்கிறார் யாஸ்கின்..மகாபாரத்தின் குருஷேத்ர போருக்குப் பிறகு கிருஷ்ணரின் சாபத்தால் சாகாவரம் பெறும் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) அந்த குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்திலிருந்து விடுபட காத்திருக்கிறார், இதன் பின் நடப்பவைகள் என்ன என்பதே கல்கி படத்தின் மீதி கதை.


பைரவா என்னும் கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரித்த பாணியில் இருக்கும் சிறப்பான நடிப்பை கொடுத்து தன் ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்துள்ளார் பிரபாஸ். அஸ்வத்தாமாவாக நடித்துள்ள அமிதாப் பச்சன் தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தனது அனுபவ நடிப்பை அருமையாக வெளிக்காட்டியுள்ளார்.


சுமதியாக நடித்துள்ள தீபிகா படுகோனை பொறுத்தவரையில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் குறைவில்லா நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். அடுத்து குறிப்பிட்டு சொல்ல கூடியவர் மேலும் தமிழ் சினிமாவில் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன், இவர் இந்த படத்தில் தன் குரல் மற்றும் உடல் மொழியால் தனி முத்திரை பதித்துள்ளார்,இந்திய சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படத்தின் வாயிலாக இணைந்திருப்பது படத்தின் குறிப்பிடச்சொல்லக்கூடிய அம்சமாகும். மேலும் ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம் போன்றோரின் திரை பங்களிப்பும் நன்றாக உள்ளது.


இது போன்ற கதைகளுக்கு நடிப்புக்கு இணையாக ,பெரும் பங்களிப்பை தரக்கூடியவையாக படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பகலைஞர்களின் கற்பனையும், கை வண்ணமும்உள்ளது ,அந்த வகையில் இந்த படத்தில் பிரமாண்டமான கற்பனை உலகத்தையும் ,அதன் நிகழ்வுகளையும் கண்முன்னே காட்சிப்படித்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் (DJORDJE STOJILJKOVIC). கதையின் கோர்வையான நகர்வில் கோட்டகிரி வெங்கடேசுவர ராவின் படத்தொகுப்பு பாரட்டும்படியுள்ளது .சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கதையோட்டத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகள் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.


பிரம்மாண்டமான கதைகளம், மாஸ் நடிகர்கள் ,வலுவான தொழில்நுட்பகலைஞர்கள் என மெகா கூட்டணியுடன்  சேர்ந்து நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த கல்கி 2898 AD படம் புராணக்கதையின் அடிப்படையில் ,அறிவியல் கலந்த கற்பனை காட்சிப்பதிவாக உருவாக்கப்பட்டுள்ளது .

0 comments:

Pageviews