நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!
‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து', 'ஃபர்ஹானா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'சித்தா' படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார்.
அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
0 comments:
Post a Comment