சபரி விமர்சனம்

 

கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது மகள் தான் உலம் என்று வாழ்கிறார். அதே சமயம், அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சிக்கிறார். இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கிறார். தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.


நாயகியாக வரலட்சுமி சரத்குமார், எமோஷனல் காட்சிகளிலும் சரி, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, அசத்தியுள்ளார். குழந்தையை காணாமல் பறிதவிக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மைம் கோபி வந்து செல்லும் காட்சிகள் திகில் ரகம். வரலக்‌ஷ்மியின் மகள் பேபி நிவேக்‌ஷா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி, பேபி கிருத்திகா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


இயக்குனர் அனில் காட்ஸால் எழுதப்பட்ட சபரி திரை கதை , தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உணர்ச்சி மிக்க கதையாக இறுதியில் ஒரு தாய் தன் மகளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு த்ரில்லராக திரை கதையாக அமைத்துள்ளார்.


ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப திரையில் நம்மை ரசிக்கவைத்துள்ளது .


கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிகவும் சிறப்பு .

0 comments:

Pageviews