ஸ்டார் திரை விமர்சனம்

 

பள்ளி பருவத்தில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார். தன்னால் முடியாததை தன் மகன் செய்வான், என்ற நம்பிக்கையில் அவரது கனவுக்கு துணை நிற்கிறார் தந்தை லால். ஆனால், அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு பொறியியல் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவடோடு தொடர்ந்து பயணிக்கிறார். அவரது கனவை நினைவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் போது, காலம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. நடிகராக ஜெயித்துக் காட்டுவேன், என்று மீண்டும் தனது கனவு பயணத்தை தொடரும் கவின் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.


கலையாக நடித்திருக்கும் கவினின் நடிப்பில் அவ்வளவு நிதானம். பள்ளி, கல்லூரி, வேலை, கனவிற்கான தேடல், குடும்பம் என ஆல் ரவுண்டராக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். . கலையின் அப்பாவாக வரும் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், ஒவ்வொரு காட்சியிலும் அன்பை நடிப்பால் பொழிந்து இருக்கிறார். பாண்டியனின் மனைவியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகிய இரண்டு நாயகிகள்.இருவருக்குமே முக்கியமான அதை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள்.


எழிலரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இனிமை. யுவன் இசையில் பாடல்கள் பலவிதம். பின்னணி இசை பலம். எழுதி இயக்கியிருக்கும் இளன், தன்னுடைய தந்தையின் கதையைப் படமாக்குகிறோம் கூடுதல் ஈர்ப்புடனும் அர்பணிப்புடனும் பணியாற்றியிருக்கிறார் என்பது திரையில் தெரிகிறது.

0 comments:

Pageviews