ஐஃபா உற்சவம் 2024 - பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன

 

சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வுத்துறைக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் மேதகு.ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அவர்களின் கௌரவ ஆதரவின் கீழ்,

ஐஃபா உற்சவம்-2024-ஆனது,சினிமா துறையில் செய்த சாதனைகளின் மூலம் சிறந்து விளங்குபவர்களையும்,

அதே சமயம் நம் நாட்டின் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த திறமையாளர்கள்,

கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களையும் அங்கீகரிக்கவும் கௌரவிக்கவும் தயாராக உள்ளது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபா உற்சவம்-2024, கடல்சார் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மிகச் சிறந்த அனுபவங்களை தரும் இடங்களை உருவாக்குவதில் வல்லவர்களான அபுதாபி மற்றும் மிரலின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.


ஐஃபா உற்சவம்-2024, வரும் செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் அபுதாபியின் உள்ள யாஸ் தீவில் அமைந்துள்ள எதிஹாட் அரங்கில், ஒப்பிடமுடியாத கொண்டாட்டத்தை அனுபவிக்கும் விதமாக தென்னிந்திய திரைத்துறை யின் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் பல்வேறு தொகுப்பாளர்கள்  மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளின் அணிவகுப்பாக நடைபெறுகிறது.


பிரமாண்டமான தொடக்க நாளில்  தமிழ் மற்றும் மலையாள திரைத்துறைகளுக்கான விருதுகள் வழங்குதலும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அடுத்த நாள் தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இரண்டு நாள் ஐஃபா உற்சவம் கண்கவர் நிகழ்ச்சிகள் முதல் இதயப்பூர்வமான நினைவுகூர்தல்கள் வரையிலான தென்னிந்திய சினிமாவின் சிறப்பை பறைசாற்றும் விதத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டமாக அமையும்.


பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன.


தமிழ்,தெலுங்கு, மலையாளம்,விருதுப் பரிந்துரைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.


உலகளவில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற தென்னிந்திய சினிமாவின் எழுச்சி மறுக்க முடியாத வகையில் ஈர்ப்பை ஏற்படுத்தி, தமிழ், தெலுங்கு, 

மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை விரைவாக அடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு 

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.


இதுவரை இல்லாத வகையிலான தென்னிந்திய சினிமாவின் மறக்க முடியாத கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்! அபுதாபியின் குறிப்பிடத்தக்க நகரமான யாஸ் தீவில் நடைபெறும் 

ஐஃபா உற்சவத்திற்கான உலகளாவிய சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் பொது மக்களுக்காக

விற்பனையில் உள்ளன.

0 comments:

Pageviews