ஆடுஜீவிதம் விமர்சனம்
படத்தில் கதாநாயகன் பிரிதிவிராஜ் அவர்கள் நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு வெளிநாட்டில் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் இவர் வேண்டும் நண்பருடைய மாமாவின் மூலமாக சவுதி அரேபியாவில் வேலை செய்ய வாய்ப்பு வருகிறது. உதவியாளர் வேலைக்காக தான் இவர் அங்கு செல்கிறார். ஆனால், அங்கு போன பின்பு தான் ஹீரோவுக்கு பேரதிர்ச்சி காத்து இருக்கிறது. அங்கு கொத்தடிமை வேலைக்கு தன்னை எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பின் இந்த வேலைக்கு தான் வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று பிரித்விராஜ் கெஞ்சி கதறி விடுங்கள் இருந்தாலும், அவரை விடவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் பிரிதிவிராஜ் பல கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். மேலும், பலமுறை தப்பிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், அவரால் தப்பிக்க முடியாமல் முதலாளி இடம் மாட்டிக் கொள்கிறார்.இதனால் பல வருடங்கள் சவுதி அரேபியாவிலேயே பிரித்விராஜ் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது? பிரிதிவிராஜ் அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் பல காட்சிகள் பார்வையாளர்களையே கண்ணீர் வர வைத்திருக்கிறது. அமலாபால் உடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் பெரிதாக இல்லை என்றாலும் அவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
மேலும், ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அதே போல் ஒளிப்பதிவும், எடிட்டிங் நன்றாக இருக்கிறது.
ஆகமொத்தம் ஆடுஜீவிதம் அருமையான படம்.
0 comments:
Post a Comment