மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் டிஎஸ்ஜி!
மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகர் டி.எஸ்.ஜி, 2017-ல் 'டி.எஸ்.ஜி கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி,அதன் மூலம் திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட வெளியீடுகள் மற்றும் கோலிவுட்டில் விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'கேபிடல் ஒன்' குழுமத்தின் ஆலோசனை வழங்கும் அமைப்பின் ஆலோசகர்கள் குழுவில் பங்கேற்பவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர் ஆனார்.
நடிகர் 'டி.எஸ்.ஜி' மலேசியாவில் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்த பிறகு, சமீபத்தில் நடத்தப்பட்ட பாடகர் கார்த்திக்கின் இசைக் நிகழ்ச்சி மற்றும் தனது அடுத்த பட வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அதனால் இந்த வார தொடக்கத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மேலும் அவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.இது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment