ரெபல் திரை விமர்சனம்

 

படத்தின் கதை 80களில் துவங்குகிறது. மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ் குமார்). அவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைத்திருக்கிறது. அது போன்று பல குடும்பங்கள் இதே வறுமை பின்னணியில் வாழ்கிறது. அவர்களின் வாழ்வை மாற்றும் ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்விதான். வறுமையின் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரிசர்வேஷன் கோட்டாவில் சில தமிழ் மாணவர்களும், ஜி வி பிரகாஷ் குமாரும் அவரது நண்பரும் சேருகின்றனர்.அங்கு கேரள மாணவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அந்த கல்லூரியில் இரண்டு கேரள மாணவ சங்கங்கள் இருக்கிறது. அச்சங்கங்கள் வைக்கும் சட்டம் தான் கல்லூரியை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்களால் அக்கல்லூரியில் படிக்கும் பிற தமிழ் மாணவர்களுக்கு பிரச்சனையும், வலிகளும் மட்டுமே மிச்சம். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை ஜி வி பிரகாஷ் குமார் எதிர்த்து போட்டியிடுகிறார்.இறுதியில் இந்த போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் வென்றாரா? இல்லையா? என்பதே மீதி கதை.


மாணவர் வேடத்தில் ஜிவி பிரகாஷ் மிகவும் பொருத்தமாக இருப்பதுடன் ஒரு தொழிலாளியின் மகன் என்கிற அளவிலும் அச்ச அசலாகப் பொருந்துகிறார். ஆதித்யா பாஸ்கர், க்ல்லூரி வினோத், ஆண்டனி ஆகியோர் சக மாணவர்களாக அவர்களுக்குக் கொடுத்த வேலைகளைச் செய்திருக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியராக வரும் கருணாஸ், தமிழக மாணவர்களின் நலனுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.


அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எண்பதுகளில் கதை நடப்பதை நம்பகத் தன்மையுடன் படம் பிடித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள்  கேட்கும் விதத்திலும், பின்னணி இசை நேர்த்தியுடனும் ஒலிக்கிறது. ஆனாலும் ஒரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தப் படம் அதைத் தாண்டியும் ரசிக்கவும் வைப்பது பாராட்டுக்குரியது.

0 comments:

Pageviews