பூமர் அங்கிள் விமர்சனம்

 

நாயகன் நேசம் (யோகி பாபு), ‘எமி’ என்ற கதைப்பெயர் கொண்ட தன் ரஷ்ய நாட்டு வெள்ளைக்கார மனைவியை விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது பிடிவாதமான முடிவை ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கிறார் மனைவி எமி, அதாவது, நேசம் தனது சொந்த ஊரில் உள்ள தனது சொந்த அரண்மனைக்கு தன்னை அழைத்துச் சென்று ஒருநாள் தங்க வேண்டும். இது நடந்தால் உடனே நான் விவாகரத்துக்கு உடன்படுவேன் என்கிறார் எமி. எதற்காக இப்படியொரு நிபந்தனை என்பது புரியாத நேசம், எப்படியோ… தனக்கு விவாகரத்து கிடைத்தால் சரி… என்ற எண்ணத்தில், ‘அரண்மனையின் மேல்தளத்துக்கு மட்டும் செல்லக் கூடாது’ என்ற பதில் நிபந்தனை விதித்து, எமியை தன் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார். எமி ஏற்படுத்தும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குள் நேசம் தள்ளப்படுகிறார். அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வந்த பழைய நண்பர்கள்,


நேசமாக யோகி பாபு நடித்திருக்கிறார். வழக்கம் போல் படம் முழுக்க கவுண்ட்டர் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார். சேஷு, பாலா, தங்கதுரை ஆகியோரும், நாட்டாமையாக வரும் ரோபோ சங்கரும் ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார்கள். ஓவியா கொஞ்சம் கிளாமராக ஒரு பாட்டுக்கு ஆடி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.


ஒளிப்பதிவாளர் சுபாஷ்தண்டபாணி,ஒரே இடத்துக்குள் சுற்றுகிறோம் என்கிற எண்ணம் வராதவாறு வண்ணமயமாகக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் ஆகியோர் இந்தக்கதைக்கேற்ற பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசையிலும் குறைவில்லை. திரையரங்குக்கு வரும் இரசிகர்கள் நெஞ்சம் நிறையச் சிரிக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்.

0 comments:

Pageviews