ரஸாகர் விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த பல சமஸ்தானங்கள் ஒன்றினைக்கப்பட்டது. அப்படி இந்தியாவுக்குள் இருந்தாலும் தனி ராட்சியம் செய்துக்கொண்டிருந்த ஐதரபாத், இந்தியாவுடன் இணைய மறுத்ததோடு, துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக உருவெடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது. அவர்களுடைய முயற்சியை இந்தியா எப்படி முறியடித்து, ஐதராபாத் சமாஸ்தானத்தை இந்துஸ்தானுடன் இணைத்தது? என்ற வரலாற்று உண்மையை விவரிப்பது தான் ‘ரஸாகர்’ படத்தின் கதை.
இதுவரை சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள், ஐதராபாத் சமஸ்தானத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள், அங்கிருந்த இந்துக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பதை மட்டுமே விவரித்துள்ளது.
ஐதராபாத்தை ஆண்ட மிர் உஸ்மான் அலிகான் வேடத்தில் நடித்திருக்கும் மகரந்த் தேஷ் பாண்டே, அசிம் ரஸ்வி வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் அர்ஜூன், சந்தாவாவாக நடித்திருக்கும் வேதிகா, எம்மடி ராஜி ரெட்டியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சர்தார் வல்லபாய் பட்டேல் வேடத்தில் நடித்திருக்கும் தேஜ் சப்ரு உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் குஷேந்தர் ரமேஷ் ரெட்டியின் உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் மிளிர்கிறது. பீம்ஸ் சிசிரோலியோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
1947ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், துப்பாக்கிகள், கிராமம் என்று கலை இயக்குநர் திருமலா எம்.திருப்பதியின் அபாரமான பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதுவரை யாரும் சொல்லாத வரலாற்று உண்மையை ரத்துமும், சதையுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் யதா சத்யநாராயணா.
0 comments:
Post a Comment