ஜோஷ்வா இமைபோல் காக்க விமர்சனம்

 

Contract கில்லர் ஆக இருக்கும் கதாநாயகன் ஜோஷ்வா மற்றும் கதாநாயகி குந்தவி இருவரும் காதலித்து வர, ஒரு கட்டத்தில் ஜோஷ்வா நான் ஒரு Contract கில்லர் என என தன் காதலியிடம் சொல்கிறான், அதனால் குந்தவி அவனை விட்டு பிரிந்து செல்கிறாள். அமெரிக்காவில் வக்கீலாக இருக்கும் குந்தவியை கொல்லத் துடிக்கிறது ஒரு கும்பல். அவரை காப்பாற்றுமாரு வருணுக்கு(ஜோஷ்வா) ஒப்பந்தம் வருகிறது. காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கும் வருண், தனது காதலியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதி படத்தின் கதை.


நாயகன் வருண் கதைக்கு ஏற்ற வகையில் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகி ராஹி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். விசித்திரா, லிஸி அந்தோனி, மன்சூர் அலிகான், திவ்யதர்ஷினி, கிருஷ்ணா ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.


ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென், இயக்குநர் கெளதம் மேனனுக்கு இணையாக படத்தில் உழைத்திருக்கிறார். படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ஒவ்வொரு ரகத்தில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் கார்த்திக் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது பணியும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.


வழக்கம் போல் கெளதம் மேனனின் படம். கண்டிப்பாக ரசித்துவிட்டு வரலாம்.

0 comments:

Pageviews