Sunil Prem Vyas எழுதி இயக்கியிருக்கும் TAKE IT EASY

 

இன்றைய சூழ்நிலையில், நவீன நகரங்களில், தங்களது குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்திட முற்படும் பெற்றோர் , தங்களது குழந்தைகளின் சார்பாக , அவர்களுக்கான  எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டு , தங்கள் திட்டமிட்டபடிதான் தங்களது குழந்தைகள் தத்தம் எதிர்காலத்தை வகுத்துக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்!


தங்களது குழந்தைகளுக்கும், அவர்களது படிப்பு பற்றியும், எதிர்காலம் பற்றியும் , அவர்களே சுயமாக சிந்தித்து முடிவெடுக்க எண்ணம் , குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை முழுவதுமாக மறந்து விடுகிறார்கள்!

தங்களது குழந்தைகளையும் அவர்களாகவே சிந்தித்து , முடிவெடுக்க மற்றும் செயல்பட , பெற்றோர்கள், உறுதுணையாக நிற்கவேண்டும் ஒழிய , தங்களது திட்டங்களை அமுலாக்க, தங்களது குழந்தைகளை பயன்படுத்த முற்படுவது சரியான செயலன்று என்கிற கருத்தை வலியுறுத்துகின்ற ஓர் திரைப்படமிது!


இரு சிறுவர்களின் சின்னச்சிறு உலகத்தினை சுற்றி படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது!


இப்படம், பெற்றோருக்கொரு பாடம் எனலாம்!


இந்தப்படத்தை Dharmesh Pandit தயாரித்துள்ளார். Hansa Pictures வெளியிடுகிறது.


0 comments:

Pageviews