நினைவெல்லாம் நீயடா விமர்சனம்

 

பள்ளியில் புதிதாக வந்து சேரும் யுவலட்சுமி மீது காதல் கொள்ளும் இள வயது பிரஜன்  தன் காதலை அவரிடம் சொல்லத் தயங்கி பள்ளி முடியும் தருவாயில் காதல் கடிதம் தருகிறார். இந்நிலையில் யுவலட்சுமி தந்தையின்  உடல் நிலை பாதித்ததால் அவரைக் காண  வெளிநாடு புறப்பட்டு செல்கிறார். சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில்  பிரஜனை தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தார் வற்புறுத்துகின்றனர். அதை ஏற்று அவரை திருமணம் செய்கிறார். ஆனால் இருவரும் மனதளவில் ஒற்றுமையாக இல்லாமல் சண்டை சச்சரவு என்று இருக்கின்றனர். பழைய  காதலை எண்ணி பிரஜன் குடிகாரனாக மாறுகிறார். அதை பார்த்து அவரது மனைவி மனம் பேதலித்து பைத்தியம் ஆகிறார். இந்த நிலையில் வெளிநாடு சென்ற யுவலட்சுமி மீண்டும் இந்தியா திரும்புகிறார். அவருக்கு திருமணம் ஆகி இருக்கும் என்று எல்லோரும் கூறிய நிலையில் அவர் பிரஜனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக் கிறார். அதைக் கண்டு பிரஜன் மனம் வாடுகிறார். எப்படியாவது பிரஜனை திருமணம் செய்துக் கொள்ள  யுவலட்சுமி எண்ணு கிறார் ஆனால் இறுதியில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

பிரஜன் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காதலியுடன் வாழ முடியாமல் மனைவியுடன் வாழ பிடிக்காமல் படும் வேதனைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரியங்காவை சின்னப் பாத்திரத்தில் காட்டியதிலும் ஏமாற்றமே! இளையராஜாவின் இசையில் பாடல்கள் இதம்.பின்னணி இசையில் வழக்கத்தைவிட அதிர்வை கூட்டியிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதால் ரசிக்க முடிகிறது. 

0 comments:

Pageviews