ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஜாம் ஜாம்’!

 

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சத்தோடு பார்வையாளர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் படைத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. வர்த்தக வட்டாரங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற இந்தத் தயாரிப்பு நிறுவத்தின் அடுத்த பெரிய அப்டேட் இப்போது வெளியாகி இருக்கிறது. 


’ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சுலர்’ என்ற இரண்டு காதல் வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘லவ் டிரையாலஜி’யை கொடுக்க தற்போது அடுத்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர். இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.


’ஜாம் ஜாம்’ படம் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது. தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக இருந்து இயக்குநராக மாறி ’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

0 comments:

Pageviews