சிக்லெட்ஸ் விமர்சனம்
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே தோழிகளாக இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது ஒவ்வொரு கனவு. அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூன்று பெண்கள், தங்களது வயது கோளாறில் காதல், டேட்டிங் போன்ற விசயங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன்படி, மூன்று பேரும் தங்களது மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு செல்கிறார்கள். பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, தங்களது பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள். இறுதியில், பிள்ளைகளின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக நடித்திருக்கிறார்கள். மூன்று பெண்களை காதலிக்கும் இளைஞர்களாக நடித்திருக்கும் மூன்று இளைஞர்களின் கதாபாத்திரமும், நடிப்பும் தற்போதைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
படம் பார்க்க வரும் இளைஞர்களை குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இயங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் இருக்கிறது.
பாலமுரளிபாலுவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களிலும் கதைக்களத்தின் எதிரொலி. பின்னணி இசை இயல்பாக அமைந்திருக்கிறது.
காதல் மற்றும் காமம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் முத்து
0 comments:
Post a Comment