Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Movie Review



1993 ம் ஆண்டு ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் பார்க்க சென்ற 4 பேர் மர்மமான இறந்துவிடுகிறார்கள், அந்த படத்தின் இயக்குனரான ,ஜார்ஜ் மரியன் காணமல் போகிறார். இதனையடுத்து 2018 ம் ஆண்டு 5 நண்பர்கள் இணைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.

ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காததால் அருகில் உள்ள ஆலயம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு காலையில் செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். ஐடியில் வேலை பார்க்கும் ஹரிஜா, யாஷிகா ஆனந்த் பேய் படம் பார்க்க அதே தியேட்டருக்கு செல்ல அதே போல பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள். மற்றும் கணவனுக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருக்கும் பெண் மற்றும் கள்ள காதலன் என அனைவரும் அதே தியேட்டருக்கு வருகிறார்கள். அங்கு இருக்கும் அமானுஷ்யங்கள் இவர்களை தொடர்ச்சியாக பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

இவர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இறுதியில் அனைவரும் திரையரங்கை விட்டு உயிருடன் வெளியே வந்தார்களா? இல்லையா ? எனபதே ’ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கும் சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர், ஹரிஜா என இதில் யூ டியூப் பிரபலங்கள் பலர் நடித்திருக்கிறார்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நாயகி யாஷிகா ஆனந்த். கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் கதை நகர்விற்கு துணை நிற்கிறார்.

தயாரிப்பாளராக நடித்திருக்கும் முனீஷ்காந்த் வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முனீஷ்காந்த் மனைவியாக மதுமிதா நடித்திருக்கிறார். 6 மாத கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகாவிற்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். நண்பனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் பேயாக நடித்திருக்கிறார் சாரா படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெளசிக் கிரீஷ் இசையில் கேட்கும் ரகம் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. ஒளிப்பதிவாளர் ஜோஷ்வா ஜெ.பெரேஸ் ஒரு திரையரங்கில் நடக்கும் சம்பங்களை அழகாக படமாக்கியிருக்கிறார்.

நல்ல ஒரு ஹாரர் திரைப்படத்தை கையில் எடுத்திருக்கும் அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் ஒரே இடத்தில் கதை நகர்வதால் படம் பார்ப்பவர்களுக்கு சோர்வு ஏற்படும் விதத்தில் படம் இருக்கிறது. படத்தை இன்னும் விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.


நடிகர்கள் : சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர், முனீஷ்காந்த், ஜார்ஜ் மரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த்

இசை : கெளசிக் கிரீஷ்

இயக்கம் : ரமேஷ் வெங்கட்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

0 comments:

Pageviews