நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்!

 

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார் என்பது அவர் தேர்ந்தெடுத்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திரம் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த புத்தாண்டில் இருந்து இன்னும் அதிகளவில் கதாநாயகனாகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக காளிதாஸ் ஜெயராம் உறுதியளித்துள்ளார்.


இதுபற்றி நடிகர் காளிதாஸ் ஜெயராம் கூறும்போது, ”ஒரு நடிகருக்கு சிறந்த வழிகாட்டியாக இயக்குநர்கள் இருப்பார்கள் என்பதை நான் எப்போதும் உறுதியாக நம்புபவன். தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள், அவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களும் இந்த விஷயத்தை உறுதியாக கடைப்பிடித்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சின்ன கதாபாத்திரமோ பெரிய கதாபாத்திரமோ என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்தும் வகையிலான, கதாபாத்திரங்கள் கொடுத்த திறமையான இயக்குநர்களுடன் இதுவரை பணிபுரிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நான் நடித்திருப்பேன். ஆனால், அவை  விலைமதிப்பற்ற அனுபவங்களை எனக்கு பரிசளித்தன. எந்தவொரு நடிகரையும் போலவே, நானும் என்னுடைய அடுத்தக் கட்டம் நோக்கி நகர உள்ளேன். 


என்னுடைய நடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான முழு நீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன். இனிமேல், தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் படியான படங்களில் நடிக்க உள்ளேன்.  இந்த புதிய முடிவின் முதல் படியாக, பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதை நான் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

0 comments:

Pageviews