நான்கு வருடங்களுக்குப் பிறகு பேசிய முதியவர் - அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை!
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோ வாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் குழு செய்து, நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்த 85 வயது முதியவரின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்னும் கடுமையான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர்.
வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விரைவான சிகிச்சை அளிப்பதன் மூலம், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவின் நுட்பமான அறுவைச் சிகிச்சை முறை மற்றும் மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) தன்மைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது காவேரி மருத்துவமனை.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வு போன்றதொரு வலியால் அவதிப்பட்டு வந்தார் 85 வயதான திரு. வீராசாமி. தொடர்ச்சியாக மின்னதிர்வு போன்ற வலி ஏற்பட்டதோடு அன்றி, வலியின் தீவிரம் அதிகரித்ததால், வீராசாமி அவர்களால் பேசவோ, சாப்பிடவோ, பல் துலக்கவோ, தாடி மீசையை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். தாள முடியாத வலி, அவரை மனச்சோர்வடையச் செய்தது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதையும், வெளியே செல்வதையும் அடியோடு நிறுத்திக் கொண்டார். மருந்துகளால் தீர்வு காணாத வீராசாமிக்கு, சில மருத்துவ நடைமுறைகளும் தற்காலிக நிவாரணத்தையே அளித்தது. இந்நிலையில், வீராசாமி அவர்களின் மருமகன், நரம்பியல் துறையின் இயக்குநரும், குழும வழிகாட்டுனருமான டாக்டர். கிரிஷ் ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை பெற்றது குணமடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
"திரு. வீராசாமி விவரித்த அறிகுறிகளைக் கேட்ட போது, அவரது ட்ரைஜெமினல் நியூரால்ஜியாவுக்கு அறுவை சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரது வயதை கருத்தில் கொண்டு, அவர் மருத்துவ ரீதியாக அறுவைச் சிகிச்சை செய்ய தகுதியுள்ளவரா என்பதுதான்” என்று டாக்டர். கிரிஷ் ஸ்ரீதர் கூறினார்.
ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்பது நோயாளியின் முகத்தில் ஏற்படும் கடுமையான வலியை ஏற்படுத்தும் நரம்புசார் நிலையாகும். இது, பொதுவாக முகத்தில் இருந்து மூளைக்கு உணர்வைக் கடத்தும் ட்ரைஜெமினல் நரம்பின் மிக அருகில் இருக்கும் இரத்த நாளத்தில் ஏற்படுகிறது. ட்ரைஜெமினல் நரம்பின் மீது, அதை ஒட்டிய இரத்த நாளம் ஏற்படுத்தப்படும் தொடர் துடிப்பின் காரணமாக, ட்ரைஜெமினல் நரம்பில் ஏற்படும் ஒவ்வாமை வலியாக உணரப்படுகிறது. மருந்துகள் வேலை செய்யாத பட்சத்தில், MVD அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வாகும்.
இத்தகைய அறுவைச் சிகிச்சையில் சிறந்த அனுபவமுள்ள டாக்டர். கிரிஷ் ஸ்ரீதர், “எம்விடி (MVD) அறுவைச் சிகிச்சை என்பது மூளையின் இயல்பான கட்டமைப்பு எதையும் தொந்தரவு செய்யாமல் செய்யப்படும் சிக்கல் குறைவான அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை மூலம், அழுத்தத்தை ஏற்படுத்தும் இரத்த நாளத்தை, நரம்பில் இருந்து நகர்த்துகிறோம்,” என்றார்.
அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட திரு. வீராசாமி, மயக்க மருந்தின் உணர்வகற்றும் நிலையில் இருந்து விழித்த போது, முகத்தில் ஏற்பட்டிருந்த வலியில் இருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார். "எனக்கு மறுபிறப்பு கிடைத்துள்ளது. நான் சுதந்திரமாக பேச முடியும், நான் சாதாரணமாக சாப்பிட முடியும், மீண்டும் பல் துலக்க முடியும்!" என்றார் திரு. வீராசாமி. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் பேசுவதைக் கேட்க முடிந்தது என்று திரு. வீராசாமி அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடை இல்லை, குறிப்பாக நோயாளி கடுமையான வலியால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்! மயக்க மருந்து மற்றும் நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு நோயாளி மருத்துவ ரீதியான மயக்க மருந்துக்கு தகுதியானவராக இருந்தால், ட்ரைஜெமினல் நியூரால்ஜியாவிற்கு, MVD அறுவைச் சிகிச்சைதான் நீண்டகால தீர்வாகும்.
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகம், முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதிநவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.
0 comments:
Post a Comment