மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக சந்திப்பு Race


நவம்பர் மாதம் பிலிப்பைனில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் சென்னையில் இருந்து 15 க்கும் மேற்பட்ட,  வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு பெற்றனர்.

இந்த மகிழ்வை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு எம். செண்பகமூர்த்தி, அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைவர் திரு மேகநாத ரெட்டி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து , மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் ருக்மணி தேவி, இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

இவர்களை சந்தித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைவர் திரு மேகநாத ரெட்டி அவர்கள் , வெற்றியாளர்களை பாராட்டியதோடு, வேண்டிய உதவிகளை வழங்குவதாகவும், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பரிசுகளை வென்று வர வாழ்த்தினார். தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார். சமீபத்தில் இந்த வெற்றியாளர்கள் அனைவரும் விளையாட்டு துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மூத்தோர் தடகள சங்க தலைவர் திரு எம். செண்பக மூர்த்தி அவர்களுக்கு,  வெற்றியாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

0 comments:

Pageviews