இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள 'நா நா' (Na Naa)

 

கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும்

இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில்

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள 'நா நா' (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது!


பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில் இது ஒரு சிறந்த கால கட்டமாகும். ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரமாண்டமான வெற்றியை சசிகுமாரும்,  ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘போர் தோழில்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அமோக வெற்றியை சரத்குமாரும் பெற்றுள்ளார். 


இருவரும் தற்போது  கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் 'நா நா' படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இப்படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன்-த்ரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


தொழில் நுட்பக்குழு விவரம்:


தயாரிப்பாளர்: பி.கே.ராம் மோகன்,

எழுத்து மற்றும் இயக்கம்: என்வி நிர்மல்குமார்,

ஒளிப்பதிவாளர்: கணேஷ் சந்திரா,

இசையமைப்பாளர்: ஹர்ஷ வர்தன் ராமேஷ்வர் (பாடல்கள்)

அஸ்வமித்ரா & கவாஸ்கர் அவினாஷ் (பின்னணி இசை),

எடிட்டர்: ஆகாஷ் அஸோம்,

கலை இயக்குநர்: ஆனந்த் மணி, மணிவாசகம்,

கதை: பூபதி ராஜா, என்வி நிர்மல்குமார்,

வசனம்: பூபதி ராஜா, தயாநிதி சிவக்குமார், நெய்வேலி பாரதிகுமார் & சுருளிப்பட்டி சிவாஜி (கிராமப் பகுதி),

ஸ்டண்ட் டைரக்டர்: சக்தி சரவணன்,

நடன இயக்குநர்: அஜய் சிவசங்கர், லீலாவதி,

பாடல் வரிகள்: ஏக்நாத், எரவி, யூகி பிரவின், ஜெயந்தி அஸ்வமித்ரா,

ஆடைகள்: சாரங்கன்,

மேக்கப் மேன்: தினகரன்.டி,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

நிர்வாக தயாரிப்பாளர். : வினோத் குமார் எஸ்


0 comments:

Pageviews