மதிமாறன் விமர்சனம்

 

பெண்கள் மாயமாவதும், கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா இவானவைத் தேடி, அவரது தம்பி வெங்கட் செங்குட்டுவன் சென்னை வருகிறார். அப்போது அக்காவின் வீட்டருகில் இருக்கும் ஒரு பெண் மாயமானது குறித்து, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யாவோடு கண்டுபிடிக்க களமிறங்குகிறார். குற்றவாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? இந்த மர்மக் கொலைகளின் பின்னணி என்ன? என்பது தான் மதிமாறன் படத்தின் கதை.

நிஜமாகவே குள்ளமாக இருக்கிற வெங்கட் செங்குட்டுவன், குட்டையன் பாத்திரத்துக்கு சரியான பொருத்தம். உருவ கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் ஆவேசமாவது, அப்பா அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும்போது கதறித் துடிப்பது, மதி நிறைந்த மாறனாகி நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை துப்பறிந்து கண்டுபிடிப்பது, காவல்துறைக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். அவர் செய்யும் விஷயங்களில் லாஜிக், நம்பகத்தன்மை என எதுவும் இல்லாதிருப்பது பெருங்குறை என்றாலும் நடிப்பில் குறையில்லை. 

லவ் டுடே இவனாவுக்கும் நல்ல பாத்திரம். தன் தம்பியை குள்ளன்  என்று சொல்பவர்களை நின்னு மிரட்டும் போது.மனதில் இடம் பிடிக்கிறார் .

போஸ்ட் மேனாக வரும்  எம் எஸ்.பாஸ்கர் தான் சிறந்த நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். 

கார்த்திக்ராஜாவா இசை படத்துக்கு பெரிய பிளஸ். பரவேஸ் கேமிரா ரம்மியத்தையும் கிரைம் சீனையும் ரசனை கெடாமலும், பயமுறுத்தலும் இல்லாமல் படமாக்கி இருக்கிறது.

எழுதி, இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் உயரக்குறைபாடு உள்ள மனிதர்களின் வலியினை பேசியிருப்பது பாராட்டுக்குரியது. இது குறித்த வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது.

0 comments:

Pageviews