பைட் கிளப் விமர்சனம்

 

குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் தன்னுடைய ஏரியா இளசுகளையும் சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு எதிராக அவருடைய தம்பி மற்றும் நண்பர்கள் சிறுவர்களை தவறான பாதைக்கு பயன்படுத்துகின்றனர்.இதில் நடக்கும் கைகலப்பில் பெஞ்சமின் தன் தம்பி ஜோசப்பால் கொல்லப்படுகிறார். அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் விளையாட்டில் செல்வாவாக வரும் விஜயகுமார் சிக்குகிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.


நாயகனாக நடித்திருக்கும் உறியடி விஜயகுமாருக்கு,அன்பு, ஆக்ரோசம், தவிப்பு, துடிப்பு எனப்பல்வேறு வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம். ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்காகக் கடுமையாகத் தயாராகியிருக்கிறார்.கட்டுக்கோப்பான உடல், துடிப்பான உடல்மொழி ஆகியன அவருக்குப் பலம். சண்டைக்காட்சிகளில் பொறிபறக்கிறது


நாயகியாக நடித்திருக்கும் மோனிஷாமோகன் சண்டைகளுக்கு நடுவில் அவர் வரும் காட்சிகள் ஆறுதல் தருகின்றன. அவினாஷ் ரகுதேவன் மற்றும் சங்கர்தாஸ் ஆகியோர் நட்புக்கும் இரண்டகத்துக்குமான எடுத்துக்காட்டுகள்.கதையின் மையமாக இருக்கும் இவ்விருவரும் நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.கிருபாவாக வரும் சங்கர் தாஸும் சிறப்பாக நடித்திருக்கிறார். 


லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு பழக்கப்பட்ட வடசென்னையை வேறு ஒரு ஒளிவண்ணத்தில் காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, கொலைக்காட்சிகளில் மிரட்டுகிறது . இயக்குநர் அபாஸ் அ ரஹமத் தனது முதலாவது படத்திலேயே வித்தியாசமான பாணியிலான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். பழக்கப்பட்ட  கதை, பெரிய ஈர்ப்பில்லாத திரைக்கதையாக இருந்தாலும் அதை வழங்கியவிதத்தில் தான் ஒரு தனித்துவமான இயக்குநர் என்பதை நிருபித்திருக்கிறார். 


பைட் கிளப் – சிறப்பான சம்பவம்.

0 comments:

Pageviews