வட்டார வழக்கு விமர்சனம்

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  பகை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம நாயகன் சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.


கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பீராஜன், மிக இயல்பாக நடித்திருப்பதோடு, கடும்கோபம் மற்றும் காதலை மிக இயல்பாக கடத்தும் விதத்தில் அசத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவி தொட்டச்சி என்ற வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.


இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது. அதிலும், 1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறது. சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் காட்சிகள் கண்முன் நிறுத்தியுள்ளார். வட்டார வழக்கு  ஆடம்பரம் இல்லாத  ஒரு கிராமத்து வாழ்க்கையில் நம்மையும்  சேர்த்து பயணிக்க வைக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன்.

0 comments:

Pageviews