சில நொடிகளில் விமர்சனம்

 

லண்டனில் மனைவியுடன் வசிக்கிற, சொந்தமாக மருத்துவனை வைத்துள்ள, பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான அந்த இளைஞன் தன் கள்ளக் காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை அப்புறப்படுத்தி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்த அந்த குற்றச் செயலை ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள். இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரியவருகிறது. அவன் கொலையாளி என்ற விவரம் அவனை மிரட்டும் பெண்ணுக்குத் தெரிந்தது எப்படி? கணவன் கொலையாளி என்பது தெரிந்த அவனது மனைவி என்ன செய்தாள்? தன்னைச் சூழ்ந்த சிக்கல்களிலிருந்து அவன் மீண்டு வர முடிந்ததா, இல்லையா? என்பதே படத்தின் மீதிகதை 

லண்டனில் வசிக்கும் மருத்துவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் ரிச்சர்ட் ரிஷி, தனது வேடத்தை ஸ்டைலிஷாக கையாண்டிருக்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் புன்னகைப் பூ கீதா நன்றாக நடித்துள்ளார். கிளைமாக்ஸில் அவரின் டான்ஸும், அவர் செய்யும் பல உடான்ஸும்தான் படத்தின் ஒற்றை பாசிட்டிவ் அம்சம். யாசிகா ஆனந்த் தனக்கு கொடுத்த பெரிய கேரக்டரையும், தனக்கு கொடுத்த சிக்கனமான உடையையும் நன்றாக உணர்ந்து பணியாற்றியுள்ளார்.

லண்டனின் வனப்பு மிகுந்த பகுதிகளை மிக அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யூ சதானந்தன். லண்டன் நகர அழகை ஒரு நாள் சுற்றுப் பயணத்தில் பார்த்து ரசித்தது போன்ற அனுபவத்தைத் தருகிறது சில நொடிகளில் திரைப்படம். ரோஹித் குல்கர்னி இசையில் உருவான பாடல்கள் சிறப்பு. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு இசையமைத்த விதமும், படமாக்கிய முறையும் ரசிக்க வைக்கிறது.

மொத்தம் நான்கு கதாபாத்திரங்களுக்குள் முடிந்துவிடும் சின்னக்கதை.ஆனால் அக்கதாபாத்திரங்களின் அகவுணர்வுகள் ஆழமானவை.அவற்றை வைத்து இயக்குநர் வினய்பரத்வாஜ் அமைத்திருக்கும் திரைக்கதை பலம்.

0 comments:

Pageviews