பார்க்கிங் விமர்சனம்

 


ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பமான மனைவி இந்துஜாவுடன் ஒரு புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் குடும்பம் இருக்கிறது. இருவரும் ஆரம்பத்தில் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் ஹரீஷ் கல்யாண் கார் வாங்க,  அதைப் பார்க்கிங் செய்வதில் ஹரீஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனையாக வெடிக்கிறது. அந்தப் பிரச்சனையால் இருவரும் கொலைவெறி ஆகிறார்கள்,  அந்த பிரச்சனை அவர்களை அவர்களைச் சுற்றி உள்ளவர்களை எந்த எல்லை வரை செல்கிறது இப்படத்தின் மீதி கதை.


எப்போதும் சாக்லேட்  ஹீரோவாக வரும் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் அடுத்த கட்டத்தை தாண்டி நடிப்பில் கொஞ்சம் முதிர்ச்சி பெற்றுள்ளார். ஆதிகாவாக வரும் இந்துஜா துணிச்சலோடு இந்த கதாபாத்திரத்தில் நடித்ததோடு கதாபாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாக நடிசிருக்காங்க. ஆத்திரம்,கோபம்,வஞ்சம் என அனைத்து உணர்வுகளையும், நொடிக்கு நொடி மாற்றி மாஸ் காமிச்சுருக்காரு எம்.எஸ்.பாஸ்கர்

 

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா, மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு ஆகியோரது நேர்த்தியான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.


சாம் சி எஸ் இசை ஒவ்வொரு காட்சியையும் ஒரு திரில்லர் பட ரேஞ்சுக்கு மாற்றியிருக்கிறது. முதல் படத்திலியே தான் தரமான இயக்குநர் என அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். 


பார்க்கிங் - தரமான படம்


0 comments:

Pageviews