ரெய்டு விமர்சனம்
'ரெய்டு' கன்னட சினிமாவில் ஷிவ் ராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'டகரு' படத்தின் ரீமேக்காகும். இயக்குனர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார். திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான இறப்புக்கும், நாயகனின் இந்த நிலைக்கும் யார் கரணம்? என்பதே படத்தின் மீதி கதை
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். நாயகியாக வரும் ஶ்ரீ திவ்யாவுடன் காதல், பாடல் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறார். ரிஷி வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பிக்காக பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்
இயக்குநர் முத்தையாவின் வசனங்களை சில இடங்களில் ரசிக்க முடிகிறது. ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையால் சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் சாம் சிஎஸ். 'ரெய்டு' திரைப்படம் த்ரில்லர் க்ரைம் சினிமா விரும்பிகளுக்கு தீபாவளி ட்ரிட்.
0 comments:
Post a Comment