செவ்வாய்க்கிழமை விமர்சனம்

 

மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் அந்த ஊர் மக்கள் சிலரைப் பற்றி சில எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்படுகிறது. அந்த வாசகங்கள் எழுதப்பட்ட மறுநாள் அவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதுவும் இந்த சம்பவங்கள் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே நடக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா சுவேதா விசாரணை நடத்த, இறந்துபோன ஷைலுவின் ஆவி தான் இதற்கு காரணம் என்று அந்த ஊரில் உள்ள டாக்டர் ஒருவர் சொல்கிறார். இதை ஊர் நம்பினாலும், நந்திதா சுவேதா சம்பாமல் தனது விசாரணையை தொடர, உண்மையில் இந்த மரணங்களுக்கு பின்னணியில் இருப்பது ஷைலுவின் ஆவி தானா?, யார் அந்த ஷைலு? போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாக விடையளித்திருப்பது தான் ‘செவ்வாய்கிழமை’.


கதையின் நாயகியாக ஷைலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பயல் ராஜ்புத், இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.  ஆசிரியராக வந்து பாயலின் இளமையை நயவஞ்சமாக வேட்டையாடுகிற அஜ்மல் தொடங்கி, பாயலின் பாட்டியாக வருகிற ஸ்ரீலேகா, கதையின் மிகமிக முக்கியமான பாத்திரத்தில் டாக்டராக வருகிறவர், ஜமீன்தாராக வருகிறவர், கதையோடு இணைந்து பயணித்து காமெடி ஏரியாவுக்கு தீனி போட்டிருக்கிற அஜய் கோஷ் என இன்னபிற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர்கள் கதையோட்டத்தை பலமாக்கியிருக்கிறார்கள்!


சப் இன்ஸ்பெக்டராக வருகிற நந்திதா ஸ்வேதாவின் சற்றே அலட்டலான நடிப்பு கவனிக்க வைக்கிறது.


கிளைமாக்ஸ் காட்சியில் கதையின் திருப்பத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிறது ஜமீன்தாரின் மனைவியாக வருகிறவரின் துடிப்பான நடிப்பு!


காட்சிகளுக்கேற்றபடி மட்டுமில்லாமல், கதாபாத்திரங்களின் வசனங்களுக்கேற்பவும் பின்னணி இசையால் படத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் ‘காந்தாரா’ பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.


முதல் பாதியில் திகில் காட்சிகளை வைத்து பேய் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கும் இயக்குநர் அஜய் பூபதி, இரண்டாம் பாதியில் க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானரில் புது வழியில் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

0 comments:

Pageviews