‘டைகர் 3’ல் 12 ஆக்சன் காட்சிகள் ; யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்சன் காட்சிகள்
யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’, யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்சன் காட்சிகள் கொண்ட படம் என்கிற புதிய சாதனையை படைத்துள்ளது.
இயக்குநர் மனீஷ் கூறும்போது, “சல்மான், கத்ரீனா இருவரும் டைகர் மற்றும் சோயா என்கிற இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் கூட்டாளிகள். ஆனால் அது வெறும் ஆக்சன் நிமித்தமாக மட்டுமல்ல. இது அவர்களுடைய கதை. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எப்போதும் மோதல் போக்கை கடைபிடித்தாலும் அவர்களது உறவும் பங்குகள் வளர்ச்சி போல வளர்ந்திருக்கிறது. தற்போது அந்த பங்குகள் இன்னும் கூட பெரிதாகி இருக்கின்றன. அதனால் அதற்கேற்ற விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டி இருக்கிறது.
‘டைகர் 3’யில் உள்ள ஆக்சன் காட்சிகள் தற்போதைய காலகட்டத்தில் ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு இணையானதாக இருக்கும்” என்கிறார் மனீஷ்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த சகாக்கள் இருவரும் தெளிவான மற்றும் உடனடியாக எதிர்நோக்கும் ஆபத்துகளால் இந்தப்படம் படு விறுவிறுப்பான வேகத்தில் செல்லும் என்பதுடன் அது ஆக்சனின் உச்சமாகவும் இருக்கும். இதில் இடம்பெற்றுள்ள 12 அற்புதமான ஆக்சன் காட்சிகள் உங்களை இருக்கை நுனியில் அமரவைக்கும். அதிலும் ஐ-மேக்ஸில் பார்க்கும்போது அவை முற்றிலும் உலகத்தரத்தில் இருக்கும் எங்களுடைய ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோவின் இந்த காட்சிகளை பார்க்கும்போது உலகளாவிய ரசிகர்களின் தரத்திற்கு ஏற்ப மிகவும் பெருமைப்படும் விதமாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம்” என்கிறார்.
மேலும் மனீஷ் கூறும்போது, “நீங்கள் திரையரங்கிற்குள் செல்லும்போது அதன் வேகம் மற்றும் பதற்றம் எல்லாம் உங்களிடம் ஒரு அற்புதமான கிளைமாக்ஸை நோக்கி எதிர்பார்ப்பை உயர்த்தும் விதமாக இந்தப்படத்தையும் அதன் காட்சிகளையும் நாங்கள் கட்டமைத்துள்ளோம். டைகர் மற்றும் சோயாவின் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் இந்த அனுபவத்தை உணர்வதற்காக என்னால் காத்திருக்க முடியாது” என்கிறார்.
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு மிகப்பெரிய மெகாஸ்டார்களான சல்மான் கான், கத்ரீனா கைப் இருவரும் தங்களது பெருமைமிகு அடையாளங்களான டைகர் மற்றும் சோயா கதாபாத்திரங்களுக்கு இந்த ‘டைகர் 3’’ மூலம் திரும்பியுள்ளனர். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment